இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம், “சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் மோடியையும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை இழிவுபடுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல் துறையினர் அடித்துக் கொலை செய்ததாக, பொய்யான செய்தியை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர்.
மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது மற்றும் டி.என்.டி.ஜெ முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் முகமது யூசுப், என்.பி.எப் அமைப்பின் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன் ஆகியோர் மீதும், இஸ்லாமிய மக்களை வன்முறை பாதைக்கு கொண்டு செல்லும் எஸ்டிபிஐ, பிடிஎப் அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.