தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை - gokulnath

சென்னை: முன்விரோதம் காரணமாக வியாசர்பாடியில் இளைஞர் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி கொலை

By

Published : Sep 3, 2019, 1:03 PM IST


சென்னை வியாசர்பாடி கல்யாணத்தைச் சேர்ந்தவர் தணிகாச்சலம். இவரது மூன்றாவது மகன் கோகுல் என்கின்ற கோகுல்நாத். இவருக்கு வயது 23. இவருக்கு திருமணமாகி மீனா என்கின்ற மனைவி உள்ளார். மீனா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணி அளவில் கோகுல்நாத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசய்யா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரவு 10 மணி அளவில் வியாசர்பாடி தேசிங்கநாந்தபுரம் ஒன்றாவது தெருவில் கோகுல்நாத் சென்று கொண்டிருந்தபோது ராசய்யா, அவருடன் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோகுல்நாத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

வியாசர்பாடியில் இளைஞர் வெட்டிக் கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கோகுல்நாத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இரவு 11 மணியளவில் கோகுல்நாத் மரணமடைந்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் வியாசர்பாடி காவல் துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரில் நான்கு பேரை பிடித்து விசாரணை செய்துவருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details