சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக மாற்றப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக, பதவி வகித்து வரும் அவரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.
இதனை ஏற்ற குடியரசுத் தலைவர், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:உ.பி., உத்தரகாண்ட், கோவாவில் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு!