தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பதவியேற்பு - சஞ்சீவ் பானர்ஜி

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வரநாத் பண்டாரி, தலைமை நீதிபதியாக இன்று (பிப். 14) பதவியேற்கிறார்.

Madras High court chief justice
முனீஷ்வர்நாத் பண்டாரி

By

Published : Feb 14, 2022, 9:42 AM IST

Updated : Feb 14, 2022, 10:28 AM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் சஞ்ஜீப் பானர்ஜி. இவர் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததையடுத்து, முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

பிப். 10ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், முனீஷ்வர்நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முனீஷ்வரநாத் பண்டாரிக்கு இன்று காலை 10 மணியளவில் தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

முனீஷ்வரநாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்டாலினுடன் மம்தா உரையாடல்: விரைவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம்

Last Updated : Feb 14, 2022, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details