தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில்தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன -அமைச்சர் எஸ்பி வேலுமணி! - minister SP velumani news

சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு உள்ளன என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

‘தமிழ்நாட்டில்தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது’ -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
‘தமிழ்நாட்டில்தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது’ -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

By

Published : Feb 5, 2021, 4:26 PM IST

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உள்பட்ட குன்றத்தூர் மலையம்பாக்கம் தெருக்களில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என சட்டப்பேரவையில் ஸ்ரீ பெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, “இயற்கை சீற்றங்களை புயல்வேகத்தில் எதிர்கொள்ளும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி சாலைகள் அதிகம் போடப்பட்டுள்ளன. ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்கு உள்பட்ட குன்றத்தூர் மலையம்பாக்கம் தெருக்களில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 200 கிலோமீட்டர் ஊராட்சி பகுதி சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு உள்ளன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்

ABOUT THE AUTHOR

...view details