தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டப் படிப்பு நிறுத்தம்! - மெட்ராஸ் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த எம்பில் பட்டப்படிப்பு 2021-22ஆம் கல்வி ஆண்டு முதல் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம்
Mphil studies stopped in madras university

By

Published : Jun 25, 2021, 6:42 PM IST

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் (யூஜிசி) விதிமுறைகளின்படி எம்.பில் பட்டப்படிப்பினை முடித்தவர்கள் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக 2009ஆம் ஆண்டு வரையில் பணியில் சேர அனுமதிக்கப்பட்டிருந்தனர். 2018ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் மானியக்குழுவின் வழிக்காட்டுதலின்படி, எம்.பில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவிப்பேராசியராக சேர முடியாது எனவும், இந்தப் படிப்பினை இனிமேல் பயிற்றுவிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் நிறுத்தம்

பல்கலைக்கழக மானியக்குழுவின் 2018ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எம்.பில் முடித்தவர்கள் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் இனிமேல் சேர இயலாது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னைப் பல்கலைக்கழகத்தில் 18ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எம்.பில் பட்டப்படிப்பு 2021-22 கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் துறைகள், பல்கலைக்கழகத்தின் இணைப்புப்பெற்றக் கல்லூரிகளில் நிறுத்தப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீதான அறிக்கை தயார்!

ABOUT THE AUTHOR

...view details