தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லக்கிம்பூர் வன்முறை: திருமாவளவன் ட்வீட்

லக்கிம்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என எம்பி திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.

திருமாவளவன் ட்வீட்
திருமாவளவன் ட்வீட்

By

Published : Oct 5, 2021, 9:18 PM IST

சென்னை: உத்தரப் பிரதேச மாநில லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எம்.பி. திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், பாஜகவினரின் ஈவிரக்கமற்ற குரூரம்! போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றும் கொடூரம்! அதிகார மமதையால் வெளிப்படும் ஆணவம் நெஞ்சைப் பதற வைக்கும் பெருந்துயரம்! மோடி அரசே இதற்குப் பொறுப்பேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு! சென்னையில் அக் 08 ஆம் தேதியன்று விசிக கண்டன ஆர்ப்பாட்டம் என தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை

லக்கிம்பூர் வன்முறை

பான்பிர்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்துள்ளார். அவரை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், ஆஷிஷ் மிஸ்ராவின் காரை மறித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ், போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது.

8 பேர் உயிரிழப்பு

இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காருக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இச்சம்பவத்தில் நான்கு உழவர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் என எட்டு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: யோகி ராஜினாமா செய்யவேண்டும் - திருமாவளவன் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details