தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணாநிதியும் கனிமொழியும்: வைரலாகும் சிறை வாசல் புகைப்படம்! - kalaingar kanimozhi

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான கருணாநிதி கடந்த 2001ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தினத்தை நினைவுகூர்ந்து, கனிமொழி உருக்கமாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

கருணாநிதி கைது, கருணாநிதி கனிமொழி புகைப்படம், கனிமொழி ட்விட்டர் பதிவு, கனிமொழி ட்விட், கனிமொழி, கருணாநிதி, சென்னை சிறை வாசலில் கனிமொழியும் கருணாநிதியும், கருணாநிதி, கலைஞரும் கனிமொழியும், கலைஞர் கைது
கனிமொழி ட்விட்

By

Published : Jun 30, 2021, 7:21 PM IST

Updated : Jun 30, 2021, 7:44 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்த காலங்களில் 1996 - 2001ம் ஒன்று. அதற்கு பின், 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஆச்சாரியாலு, திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் சிறு துறைமுகங்கள் அமைப்பதில் ஊழல் நடைபெற்று இருப்பதாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

நள்ளிரவு கைது

இதைக் காரணம் காட்டி, கருணாநிதியை அதிமுக அரசு அவரது சிஐடி நகர் இல்லத்தில் நள்ளிரவு 1:30 மணியளவில் கைது செய்தது. அப்போது, அவருடன் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது. அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பலரும் விமர்சித்தனர்.

போராளியிடம் பெற்ற பாடம்

இந்த நிகழ்வு குறித்து கனிமொழி எம்.பி., இன்று (ஜுன் 30) கருணாநிதியின் கைது நாளை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்,"சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் (கருணாநிதி) கற்றுக்கொண்ட பாடம், 'அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'.

கனிமொழி ட்விட்

தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழியின் இந்த ட்விட்டர் பதிவும்; கருணாநிதி, கனிமொழி இருவரும் சென்னை சிறைச்சாலை வாசலில் அமர்ந்திருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: ’பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பெயரில் திட்டங்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Jun 30, 2021, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details