தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஈடுசெய்ய முடியாத இழப்பு' - மைதிலி சிவராமன் மறைவிற்கு ஜோதிமணி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவிற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ஜோதிமணி ட்வீட்
ஜோதிமணி ட்வீட்

By

Published : May 30, 2021, 6:53 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாதர் சங்க முதுபெரும் தலைவருமான மைதிலி சிவராமன் கரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 81.

தோழர் மைதிலி சிவராமன் சிஐடியூ தொழிற்சங்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர், ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பிய நிறுவனர்களில் ஒருவர், கீழவெண்மணி தொடங்கி வாச்சாத்தி வரை அடித்தட்டு மக்கள், பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் என விளிம்புநிலை மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்.

ஜோதிமணி ட்வீட்

உணர்வுப்பூர்வமான எழுத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை விதைத்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மைதிலி சிவராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், "தோழர் மைதிலி சிவராமன் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தீவிரமான மார்க்சியவாதி,பெண்ணுரிமைப் போராளி. கீழ்வெண்மணிப் படுகொலை,வாச்சாத்தி வன்கொடுமை இவற்றில் தோழர் மைதிலியின் பங்கு முக்கியமானது.அவரது குடும்பத்தினருக்கும்,தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கீழ்வெண்மணி முதல் வாச்சாத்திவரை அடித்தட்டு மக்களின் பக்கம் நின்றவர் மைதிலி சிவராமன்!

ABOUT THE AUTHOR

...view details