தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சதானந்த கௌடாவின் சர்ச்சை வீடியோ - சீமானை மீண்டும் சீண்டிய ஜோதிமணி எம்பி - Sathanantha Gowda

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சதானந்த கௌடாவின் சர்ச்சை வீடியோ வெளியானதை தொடர்ந்து பாஜகவையும், சீமானையும் சீண்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார்.

சீமானை மீண்டும் சீண்டிய ஜோதிமணி எம்பி
சீமானை மீண்டும் சீண்டிய ஜோதிமணி எம்பி

By

Published : Sep 20, 2021, 3:04 PM IST

தமிழ்நாட்டில் பாஜகவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலி குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சதானந்த கௌடா ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அதிர்ச்சிகரமான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாஜகவின் 14 வீடியோக்கள்

அதில், “தமிழ்நாட்டில் பாஜகவின் கே.டி. ராகவனின் பாலியல் வீடியோவைத் தொடர்ந்து கர்நாடகவிலுள்ள பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் சதானந்த கௌடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் வெளிவராத பாஜகவின் 14 வீடியோக்கள் அவர்களது அதிகார அச்சுறுத்தலால் முடக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது. பாஜகவிலுள்ள பெண்களும், வெளியிலுள்ள பல பெண்களும் பாதிக்கப்பட்டிருக்க கூடும்.

சீமாணை சீண்டிய ஜோதிமணி

அதனால்தான் குற்றவாளிகளை பாஜக தொடர்ந்து காப்பாற்றிவருகிறது. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

“உலகில் யாரும் செய்யாததையா சதானந்த கௌடா செய்துவிட்டார்” என எந்நேரமும், பாஜகவின் பி டீமான சீமான், களத்தில் குதித்து பாஜகவை காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. நாம்தான் குறிப்பாக பெண்கள்தான் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ் படைப்புகள் நீக்கம், பாஜகவின் அழித்தொழிப்பு நடவடிக்கையே'

ABOUT THE AUTHOR

...view details