தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களே உஷார்... ரேசன் அட்டைக்கு ரூ.1000 போலி விண்ணப்பம்... - 1000 Cash scheme in tamilnadu

தமிழ்நாடு அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட போலி விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருவதாக அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

mp anbumani ramadoss tweet on Rs 1000 Cash Aid for Women in tamilnadu
mp anbumani ramadoss tweet on Rs 1000 Cash Aid for Women in tamilnadu

By

Published : Feb 14, 2022, 3:33 PM IST

சென்னை:இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடும்பத்தலைவிகளுக்கான மாதம் 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் தமிழ்நாடு அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.

அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது. விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:எப்போது குடும்ப அட்டைக்கு ரூ.1000? - விவரம் உள்ளே

ABOUT THE AUTHOR

...view details