தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவேக், கி.ரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் - கலைவாணர் அரங்கம்

நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவேக், கி.ரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம்!
விவேக், கி.ரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம்!

By

Published : Jun 22, 2021, 12:27 PM IST

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் மு. பாண்டுரங்கன், அ. முஹம்மத்ஜான் உள்ளிட்ட 13 பேரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவேக்

மேலும் நடிகர் விவேக், எழுத்தாளர் கி. ராஜநாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய நிர்ணய சபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரின் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கலைவாணர் அரங்கம்

சபாநாயகர் அப்பாவு, "சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மறைவு திரையுலகிற்குப் பெரிய இழப்பு. தன் நடிப்பாற்றலால் நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர். விவேக் மரம் நடுதல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுப்பட்டவர்" எனப் புகழாரம் சூட்டினார். பின்னர் பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details