தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகன் உயிரிழந்த தகவலைக் கேட்டு தாய் தற்கொலை! - suicide in chennai

சென்னை: மகன் உயிரிழந்த தகவலைக் கேட்டு தாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய்-மகன் உயிரிழப்பு
தாய்-மகன் உயிரிழப்பு

By

Published : Nov 21, 2020, 8:09 PM IST

சென்னை பழவந்தாங்கல் பி.வி. நகர் 3ஆவது தெருவில் வசித்து வருபவர் தட்சணாமூர்த்தி (75), ரமணி பாய் (72) தம்பதி. அவர்களுக்கு ராம் பிரபு (32), பிரியா (30) என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

அதில், ராம் பிரபு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். சில நாள்களுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் ரத்த கட்டி இருப்பது தெரியவந்தது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு 1.30 மணியளவில் உயிரிழந்தார். இந்தச் செய்தியை கேட்ட தாய் ரமணி பாய் துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த பழவந்தாங்கல் காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:அரியர் தேர்வு எழுதவந்த மாணவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details