சென்னைவியாசர்பாடி, கரிமேடு பகுதியைச்சேர்ந்த ரகுநாதன்-இளவரசி தம்பதியினரின் மகன் பி.காம் பட்டதாரியான சுசில்(21). இவர் நடனப்பள்ளியில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு இரவில் தாமதமாக வருவதை, இவரது தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இன்று (செப்.5) வீட்டில் யாரும் இல்லாதநிலையில் சுசில் தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து, மகனைப் பிரிந்த துக்கம் தாளாத நிலையில், அவரது தாயாரும் தனது மகனைப்போல தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.