இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கொத்தவால் சாவடியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்த மாணவிகள் 10 பேர் குழுவாகப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதனை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சிலர் தவறாகப் பயன்படுத்தி, அவர்களை ஆபாசமாக சித்திரித்து அமெரிக்க சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சிறுமியைக் கொடுமைபடுத்திய வழக்கு... பானுப்பிரியா மீது விசாரணை
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க, கல்லூரி முதல்வர் பூக்கடை துணை ஆணையரிடம் புகாரளித்துள்ளார். மாணவிகள் மன உளைச்சலில் இருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளை சைபர் க்ரைம்செல் காவல் அலுவலர்கள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கூலிப்படைகளின் அரசி துர்மரணம்!
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது கணினி நிபுணர்களின் வலியுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் இந்த சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல என்பது ஒருபக்கமிருக்க, இவர்களைத் துரத்தும் நேரத்தில் இணையத்தில் இவர்கள் பரப்பும் புகைப்படங்கள், அதிகமாக பகிரப்பட்டு, பலரால் தரவிறக்கம் செய்யப்படுகிறது. அதன்பின், இவற்றை இணையத்திலிருந்து நீக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.