சென்னை: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காச நோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில், மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட நடமாடும் வாகனம் மூலம் கடந்த 29ஆம் தேதி முதல் நேற்று (ஆக.4) வரை 3,087 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2,477 எண்ணிக்கையிலான கோவீஷீல்ட் தடுப்பூசிகளும், 610 கோவேக்சின் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அரசாணை