தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் - government buses from Chennai

கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

அரசு பேருந்து
அரசு பேருந்து

By

Published : Oct 2, 2022, 1:44 PM IST

சென்னை:காந்தி ஜெயந்தி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்ட 5,679 அரசு பேருந்துகளில் 3,12,345 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஒருபுறம் ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு, ஆம்னி பேருந்துகளின் விலை உயர்வு காரணமாக ஏழைகள் யாரும் பாதிக்கப்படுவதில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். இதனால் வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளன.

மேலும் பண்டிகை காலம் முடிந்து வெளியூரில் இருந்து சென்னைக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ‘பண்டிகை நாள்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது’ -அமைச்சர் சிவசங்கர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details