தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பாஜகவில் 10 கோடி பேர் இணைவார்கள்..!' - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

சென்னை: "பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கையில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் இணைவார்கள்" என்று, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ravishankar

By

Published : Jul 6, 2019, 5:04 PM IST

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று சென்னை வந்தடைந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"கடந்த முறை நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கையில் 11 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய கட்சியாக உலகளவில் உருவெடுத்து உள்ளது. அதே போன்று இம்முறையும் அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் அதிக அளவில் உறுப்பினர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

அதேபோல் பிரதமர் மோடியின் சிறந்த ஆட்சியின் கீழ் நாட்டு மக்களின் பேராதரவின் மூலம் நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.
அதிமுகவும் பாஜகவும் நல்ல முறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு என்னுடைய மரியாதை செலுத்த விரும்புகிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details