கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக முன்னணி நிர்வாகிகள் அக்கட்சி அலுவலகத்தில் பேசி வருகின்றனர். அதன்படி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சேதுராமன், பொதுச்செயலாளர் எஸ்.ஆர். தேவர் உள்ளிட்டோர் அதிமுகவுடன் கூட்டணி குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிமுக கூட்டணியில் இணைந்த மூமுக! - மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
mmk
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.தேவர், ”அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளோம். இரட்டை இலை சின்னத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடத் தயாராக உள்ளோம். எத்தனை தொகுதிகள் தருகிறார்கள் என்பது பின்னர் தான் தெரியவரும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!