சென்னை:நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்டரியில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித்தொகை 45 லட்சம் ரூபாயை வரித் துறைக்குச் செலுத்திவிட்டதுபோல போலி ஆவணங்களைக் காட்டிவிட்டு, அத்தொகையை தனது உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் மீது 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், இறுதி அறிக்கை ஏதும் இதுவரை தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, இறுதி அறிக்கைத் தாக்கல்செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி, மேலாளர் ஹரிகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.