சென்னை:சென்னையைச்சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'நண்பர்கள் மூலம் மோகன்பாபு விஜயன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவரும், ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம், லஷ்மி நாராயணன் சுந்தரம் ஆகியோரும் பங்குச்சந்தை முதலீட்டு தொழில் செய்யும் "மார்க்" (MARC) என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பதாக கூறப்பட்டது.
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 26 விழுக்காட்டிற்கு மேலும், மாதத்திற்கு 2 விழுக்காடும் பணமும் திரும்பக்கிடைக்கும் என உறுதியளித்ததாகக்கூறியுதை நம்பி தானும் இரண்டரை லட்சம் முதலீடு செய்தேன்''எனக் குறிப்பிட்டுள்ளார்.
''உறுதி அளிக்கப்பட்டது போல மே மாதம் வரை பணம் திரும்பிக்கிடைத்த நிலையில், ஜூன் மாதம் முதல் பணம் வரவில்லை. இதுதொடர்பாக கேட்டபோது, அலுவலத்தில் தணிக்கை நடைமுறை சார்ந்த சில பிரச்னைகள் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது எனக்கூறினர். மீண்டும் திரும்பக்கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.