தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலம்மாள் பள்ளியில் " பாதுகாப்பான தீபாவளி " விழிப்புணர்வு நிகழ்ச்சி! - தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநர்

வேலம்மாள் பள்ளியில் தீப ஒளித்திருநாளான தீபாவளியன்று வெடி விபத்துகளைத் தவிர்த்து மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாட மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கண்டுகளித்தனர்
கண்டுகளித்தனர்

By

Published : Oct 26, 2021, 7:16 PM IST

சென்னை: முகப்போர் வேலம்மாள் பள்ளி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையுடன் இணைந்து 'பாதுகாப்பான தீபாவளி' விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.

தீப ஒளித்திருநாளான தீபாவளியன்று வெடி விபத்துகளைத் தவிர்த்து மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாட மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கண்டுகளித்தனர்

இந்நிகழ்வில் தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பட்டாசுகளை அரசு விதிமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்புடன் வெடிப்பது எப்படி என்பதை தீயணைப்பு வீரர்கள் வெடித்து ஒத்திகை செய்து காட்டினர்.

அப்போது எண்ணெய்த் தீ விபத்தினை இருசக்கர வாகனத்தின் உதவியுடன் அணைக்கும் புதிய யுத்தி, குடிசைத் தீ, மனிதனின் மீதான தீ ஆகியவற்றை அணைக்கும் வழிமுறைகளை தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாகச் செய்து காட்டினர்.

இறுதியாக தமிழ்நாடு தீயணைப்புக் குழுவினரின் மேற்பார்வையில் மாணவர்களுக்குப் பட்டாசுகள் வெடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க:வாழ்த்துகள் 'தலைவா' - ரஜினியை வாழ்த்தி சச்சின் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details