திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பரப்புரை கூட்டத்திலும் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப்.10) தமிழகம் வந்தார். ஆனால் அவரது வருகைக்கு எதிராக நெட்டிசன்கள் வழக்கம் போல் #GoBackModi மற்றும் #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்டாக்கி அதகளம் செய்தனர். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திருப்பூரில் போராட்டமும் நடைபெற்றது.
இது இப்படி இருக்க மோடிக்கு எதிராக, திரும்பி போ மோடியே (Go Back Modi) என்று தோசைக்கல்லில் மாவினால் எழுதப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி பல்லடம் - திருப்பூர் அரசு பேருந்திலும், ஊர் பெயர் பலகை வைக்கப்படும் இடத்திலும் GoBackModi என்ற பலகையை வைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யப்பட்டிருந்தது.