தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை

தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

moderate-rain-for-tamil-nadu-next-four-days
moderate-rain-for-tamil-nadu-next-four-days

By

Published : Apr 19, 2022, 1:23 PM IST

சென்னை:இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று (ஏப். 19) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 20) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 21) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 23ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம்) 6 செ.மீ, நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்), சூரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்), வால்பாறை PTO (கோவை மாவட்டம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details