சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (ஜன. 8), நாளை மறுதினம் (ஜன.9) தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜனவரி 10, 11 நிலவரம்
டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 10ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.