சென்னை நெற்குன்றத்தில் அலுவலர்கள் போல நாடகமாடி வீட்டில் நுழைந்து கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், பல்லவன் நகர், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் முகமது நூருல்லா(65). பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது வீட்டிற்கு வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து, நாங்கள் வருமான வரித்துறையினர் என்று கூறி, வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் சோதனை செய்வது போல நடித்து,வீட்டின் அலமாரியில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 10ஆயிரம் பணத்தையும், ஐந்து சவரன் நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர். அவர்களைத் தடுத்த நூருல்லாவை அக்கும்பல் சரமாரியாகத் தாக்கிப் பிடிக்க முற்பட்டது.