சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரம் விளக்குப் பகுதியில், கரோனா தடுப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'தீவிரமான கண்காணிப்பு, தொடர் மருத்துவ சிகிச்சை முகாம்கள் காரணமாக சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கரோனா பாதித்த 86% பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் தெளிவாகக் கூறிவிட்டார். மக்களின் எண்ணங்களையே முதலமைச்சரும் வெளிப்படுத்தியுள்ளார்.
மாநிலத்தில் நடமாடும் ரேஷன் கடைகளை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோவோடு விலையில்லா அரிசி வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை"- தமிழ்நாடு அரசு திட்டவட்டம்