தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் நடமாடும் மருத்துவ சேவை... முதலமைச்சர் தொடங்கி வைப்பு...

சென்னையில் 389 நடமாடும் மருத்துவமனைகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் நடமாடும் மருத்துவ சேவை - முதலமைச்சர் துவங்கி வைத்தார்!
தமிழ்நாட்டில் நடமாடும் மருத்துவ சேவை - முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

By

Published : Apr 8, 2022, 12:12 PM IST

Updated : Apr 8, 2022, 1:06 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 8) அண்ணா சதுக்கம் அருகே 70 கோடி ரூபாய் செலவிலான 389 நடமாடும் மருத்துவமனைகள் சேவையைத் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாத 133 நடமாடும் மருத்துவமனை வாகனங்களின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலி, ஒரு ஓட்டுநர், ஒரு துப்புரவுப் பணியாளர் பணியமர்த்தப்பட்டிருப்பர். அவர்கள் தொலைதூர கிராம மக்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிப்பர்.

திட்டத்தின் நோக்கம்:சிறந்த தாய் சேய் நலன், காசநோய்க்கான சிகிச்சை, தொற்று நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் வரையறுக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி மருத்துவ சேவை அளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் நடமாடும் மருத்துவ சேவை... முதலமைச்சர் தொடங்கி வைப்பு...

இத்திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு ஒரு வட்டாரத்தில் 40 முகாம்கள் நடத்தப்பட்டு, சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய், காசநோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மருந்துகள் வழங்கப்படும்.

முன்னதாக 2021-2022ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில், "தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்தப் புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒரு வாகனத்திற்கு தலா ரூ.18 லட்சம் செலவில் 70.02 கோடி ரூபாய் நிதி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க:நடமாடும் மருத்துவமனை சேவையை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

Last Updated : Apr 8, 2022, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details