கோயம்புத்தூர்: சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு உயர்வைக் கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
உத்தர்ப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர், தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.