மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச் 06) மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார. அப்போது பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக கட்சி அலுவலகம் சென்றார். பின்னர் அவர் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது வேட்பாளர் பட்டியலை வெளியீடு மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மநீம முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மாற்றம்! - மநீம கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என மநீம கட்சியன் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மகேந்திரன்
இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேட்பாளர் பட்டியல் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார். கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அமைச்சர் ஜெயக்குமார்