தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கமல் - chennai district news

சென்னை: "மக்கள் நீதி மய்யத்துடன், தேமுதிக இணைய வேண்டும்" என அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

By

Published : Mar 9, 2021, 4:10 PM IST

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ், தங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் எனக் கூறி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”காந்திய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிறிய இயக்கங்களிலிருந்து விலகிய நிர்வாகிகள், கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளனர்.

அக்கட்சியின் சார்பாக, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. தேமுதிக, மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும். இதைப் பற்றி விரைவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதாவை சந்தித்து கூட்டணிக்கு அழைக்க உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக!

ABOUT THE AUTHOR

...view details