நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் 66 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று பூந்தமல்லியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும், ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டிக்கு வந்த அவருக்கு, மக்கள் நீதி மய்யத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். குமணன் சாவடியில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக, அவரது கார் பின்னே அணிவகுத்த கட்சியினர், செம்பரம்பாக்கத்தில் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து வரவேற்றனர்.
படப்பிடிப்பிற்கு வந்த கமலுக்கு வரவேற்பு! - கமல்ஹாசன்
சென்னை: படப்பிடிப்பிற்காக வந்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாளையொட்டி அவரது கட்சியினர் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

kamal
அதைத்தொடர்ந்து கமலுக்கு பூசணிக்காய் சுற்றி கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டி வந்தவுடன் காரின் மேல் பகுதியில் நின்று கமல்ஹாசன் கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார். ரசிகர்களின் வரவேற்பை ஏற்ற பின் படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் உள்ளே சென்றார். அவரைக் காண கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு கூடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் : ரசிகர்களின் வாழ்த்து மழையில் கமல்!