தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொகுதி மக்களுக்காக பச்சை கொடி கட்டிய உதயநிதி - Udayanidhi started moving vegetable store

பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி திட்டத்தை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொகுதி மக்களுக்காக பச்சை கொடி கட்டிய உதயநிதி
தொகுதி மக்களுக்காக பச்சை கொடி கட்டிய உதயநிதி

By

Published : May 26, 2021, 4:46 PM IST

Updated : May 26, 2021, 5:21 PM IST

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தொடர்ந்து நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி வாகனங்களின் வியாபாரிகளுக்கு அனுமதிச் சீட்டினை வழங்கினார். இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக காய்கறி, பழங்கள் நிரப்பப்பட்ட 3 டாட்டா ஏஸ் வாகனங்கள், 5 தள்ளுவண்டிகளான நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடமாடும் காய்கறி அங்காடி விற்பனை


இந்த வாகனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட குடியிருப்புகளில் வியாபாரத்தில் ஈடுபட உள்ளன. காய்கறி , பழங்கள் மட்டுமின்றி முட்டை , ரொட்டி , பூக்கள் விற்பனையில் ஈடுபடவும் மண்டல அலுவலர் மூலம் நடமாடும் அங்காடி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடமாடும் காய்கறி அங்காடிகளுக்கு டோக்கன் வழங்கிய உதயநிதி

அண்மைக்காலமாகவே உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்துவருகிறார். குப்பை கொட்டப்படும் இடம் முதல் பொது கழிவறை வரை தொகுதியின் சந்து, பொந்துக்கெல்லாம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றியும் வருகிறார்.

இதையும் படிங்க; 'கிட்ஸ்களுக்கு கிரிக்கெட் கிட்': இது உதயநிதி உலா

Last Updated : May 26, 2021, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details