சென்னை:காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டபேரவை வளாகத்தில் நேற்று (ஏப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழை அழித்து ஒழித்துவிட்டு, சமஸ்கிருதம், இந்தியை வளர்ப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
தமிழ் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி:இதற்கிடையே தற்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு கொண்டு வந்து 12ஆம் வகுப்புக்கு பிறகு நுழைவுத் தேர்வு எழுதினால்தான், கல்லூரிக்கு செல்ல முடியும் என்ற நிலையை கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் கல்லூரியில் கால் வைக்க முடியாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.