தர்மபுரி:இலக்கியம்பட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி வீட்டில் இன்று (ஜன.20) காலை முதல் 9 மணி நேர லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
இதன்பிறகு சோதனை முடிவடைந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை அங்கிருந்து வெளியேறினர். இது குறித்து பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, “இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் மட்டுமே சோதனை நடத்தினார்கள்.
பனங்காட்டு சலசலப்புக்கு அஞ்சாத நரி...
முதல் முறையாக தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள தன் வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளார்கள். சட்டப்பேரவை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் கேள்வி கேட்பதால் என்னை மிரட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சோதனை நடத்தியுள்ளனர்.
கோவிந்தசாமி எம்எல்ஏ பேட்டி நான் பனங்காட்டு நரி. எந்தச் சலசலப்புக்கு இந்த நரி அஞ்சாது” என்றார். தொடர்ந்து, “கோவிந்தசாமி எல்எல்ஏவை மிரட்டி கோழி பிடிக்க முடியாது; நடைப்பெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக மாநில விவசாய அணித்தலைவர் டி.ஆர்.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை