சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி அரசால் வழங்கப்படுகிறது.
இந்த தொகை அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் தொகுதி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவார்கள். 2021 - 22 ஆம் நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்த நிலையில், கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும், இதன் காரணமாக தொகுதி ஒதுக்கீடு விரைவில் செயல்படுத்துமாறும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 352,50,00,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 விழுக்காடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் தொகுதி மேம்பாட்டு நிதி 2.50 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன் பட்ஜெட் மதிப்பீட்டின் 702 கோடியில் 50 விழக்காடு நிதியை விடுவிக்க தேவையான அரசாணைகளை வெளியிடுமாறு அரசுக்கு கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது தொகுதி மேம்பாட்டு நிதி 50 விழுக்காடு மட்டும் விடுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவான வழிகாட்டுதல்கள்:
* கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவரது விருப்பப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முன்னுரிமை பணிகளை தேர்வு செய்யலாம்.