தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாய்மொழியே நம் உணர்ச்சி: மு.க. ஸ்டாலின் - தாய்மொழி தின வாழ்த்து

சென்னை: தாய் மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Feb 21, 2020, 5:57 PM IST

உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்க 1999ஆம் ஆண்டில், பிப்ரவரி 21ஆம் தேதியை சர்வதேச தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ அறிவித்தது. உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காக உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகின்றது. அதன்படி இன்று உலகம் முழுவதும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் ட்வீட்

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என சொல்லி வளர்ந்தது தமிழினம்! தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்” என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details