சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். அத்துடன் அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் மகன் கார்த்திக் வீட்டிலும், சபரீசனின் நெருங்கிய நண்பர் ஜி ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
மு.க. ஸ்டாலின் மருமகன் வீட்டில் சோதனை - MK Stalin daughter
09:50 April 02
சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
ஏற்கனவே, திமுக வேட்பாளர் எ.வ. வேலு வீட்டிலும், கல்லூரியிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து இன்று சபரீசன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.
இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, விசிக தலைவர் திருமாவளவன் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுகவினர் மீதான இந்தத் தொடர் வருமானவரிச் சோதனை நடவடிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்திவருகின்றன.
இதையும் படிங்க:'சபரீசன் வீட்டில் சோதனை திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு' - திருமா குற்றச்சாட்டு