அமெரிக்காவில் ஓரிகன் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவு ஈட்டி எறிதலில் 88.13 மீட்டர் தொலைவிற்கு வீசி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார் நீரஜ் சோப்ரா. இது உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா ஆடவர் பிரிவில் பெறும் முதல் பதக்கமும், முதல் வெள்ளி பதக்கமும் ஆகும்.
இதனையடுத்து நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் நீரஜ்ஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘நீரஜ்சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதியுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து வருவதைப் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது!’ என குறிப்பிட்டுள்ளார்.