டோக்கியோ (ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.
மீரா பாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்! - Tokyo Olympics 2020 india medals
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்பதிவில், “டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளின் முதல் நாளே இந்தியாவுக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. மீராபாய் சானுவின் அசாத்திய திறமையால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கின. இரண்டாம் நாளான இன்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் எடைப் பிரிவில் தடகள வீரங்கனை மீரா பாய் சானு சாதித்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், 2020 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்தவர் என்ற பெயரையும் தட்டிச் சென்றுள்ளார்.