தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உத்தவ் தாக்கரேவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து! - உத்தவ் தாக்கரே முக ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போகும் சிவசேனா கட்சித் தலைவருக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

MK Stalin wish for Uddhav Thackeray  உத்தவ் தாக்கரே முக ஸ்டாலின் வாழ்த்து  முக ஸ்டாலின் முக ஸ்டாலின்
முக ஸ்டாலின் - முக ஸ்டாலின்

By

Published : Nov 27, 2019, 10:06 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உத்தவ் தாக்கரே அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலக் கட்சியின் தலைவர் ஒருவர் முதலமைச்சராவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சரத் பவாருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “மகாராஷ்ட்டிரத்தில் நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்கு அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும் நாடும் வலிமையாக இருக்கவும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

க்ளைமேக்ஸை நெருங்கிய மகாராஷ்டிர அரசியல் களம் - 288 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details