தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களை காக்க திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு! - நிவர் புயல்

சென்னை: புயல் மழையில் பாதித்துள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய கட்சியினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

stalin
stalin

By

Published : Nov 25, 2020, 3:31 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 'நிவர்' புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்களின் வாழ்விடங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. சென்னை மாநகரைப் பொறுத்தவரை தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடலோர மாவட்ட மக்களின் நிலையும் இதுதான்.

சென்னையில், திரு.வி.க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் உட்பட, பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டிருப்பதால், அடையாறு ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைககளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இந்நேரத்தில் திமுக நிர்வாகிகளும், மக்களுக்குத் தேவையான உதவிகளையும் பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது உள்ளிட்ட தீவிரப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

அதோடு, ஏறத்தாழ 9 மாதங்களாக கரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த புயல் மழைச்சூழல் அந்த நோய்த்தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகிவிடக்கூடாது. தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளைக் கையாண்டு, மக்களைக் காத்திட வேண்டும் ” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details