தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாகனங்களுக்கு எஃப்.சி: தனியார் நிறுவனங்கள் மூலம் மெகா வசூல் -முக ஸ்டாலின் குற்றச்சாட்டு! - திமுக தலைவர் முக ஸ்டாலின்

சென்னை: வாகனங்களுக்கு எஃப்.சி. வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் மெகா வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

MK stalin tweet on FC issue for vehicles
MK stalin tweet on FC issue for vehicles

By

Published : Dec 1, 2020, 4:39 PM IST

இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ வாகனங்களுக்கு எஃப்.சி. பெறுவதற்கு, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் கருவிகளை வாங்கி, அந்நிறுவனங்கள் வழங்கும் சான்றின்படி வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலர் சான்றளிக்க வேண்டும் எனும் கோமாளித்தனம் எதற்காக?

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கமிஷன் பெறுவதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு அரசுத்துறை சல்யூட் அடிக்க வேண்டுமா?

லஞ்ச ஒழிப்புத்துறை இந்த ‘மெகா வசூல்’ முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தவறினால், திமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'விடியும் வா' - மக்கள் கருத்துகளுக்கு அழைப்பு விடுக்கும் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details