தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிலிண்டர் விலை உயர்வு: திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்! - முக ஸ்டாலின் அறிக்கை

சென்னை: சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முக ஸ்டாலின் ட்வீட்
முக ஸ்டாலின் ட்வீட்

By

Published : Dec 16, 2020, 1:50 PM IST

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 15 நாள் இடைவெளியில் ரூ.100 வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், ஆட்சியாளர்களோ உதவிக்கரம் நீட்ட மாட்டோம் என்கிறார்கள்.

முக ஸ்டாலின் ட்வீட்

பேரிடர் சூழலில் புதிய புதிய விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமை; பொறுப்பு! விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையில் வழங்குக!

இல்லையெனில், தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது" என்று அதில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...’எய்ம்ஸ்க்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை’

ABOUT THE AUTHOR

...view details