தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்! - Covid-19 latest updates

கலைஞர் சொன்ன வருமுன் காப்போம் என்ற அறிவுறைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin
MK Stalin

By

Published : Mar 18, 2020, 9:54 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் தற்போதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனாவில் தொடங்கி தற்போது பல நாடுகளையும் ஆட்கொண்டுள்ளது கோவிட்-19 வைரஸ். இந்தியாவைப் பொறுத்தவரை கோவிட்-19ஆல் மூன்று உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதனிடையே, கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்! என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள விழிப்புணர்வுக் காணொலியில், ”கொரோனாவை எதிர்கொள்வதுதான் நமக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது. பசியின்மை, இருமல், தொண்டை கரகரப்பு, உடல் சோர்வு இதுபோன்ற லேசான அறிகுறி இருந்தால்கூட மருத்துவரைச் சென்று அணுகுங்கள்.

கலைஞர் சொன்ன வருமுன் காப்போம் என்ற அறிவுறைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகம் எத்தனையோ சோகங்களை வென்றுள்ளது. அதுபோல இதனையும் வெல்வோம்; அதற்கு வருமுன் காப்போம். கொரோனா என்ற அச்சம் தவிர்த்து அறிவியலால் வெல்வோம். நோயற்ற வாழ்வை நோக்கிய சீரான சமூகம் படைக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன - எஸ்.பி. வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details