இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாடினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்திக் கொள்வதின் அவசியம், மருத்துவர்களின் பணி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.
கரோனாவிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற தனக்கு வேறு வழியில்லை எனக் கூறி இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.