தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நல்லாட்சியின் நற்பெயரை சிதைத்து, குறைக்க வேண்டும் என்ற கெடுசிந்தனையுடன் பொய்யை மட்டுமே சொல்லி வரும் அ.தி.மு.கவால் கடந்த10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள்.
தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டி, அதில், அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்” எனக் கோரியுள்ளார்.
மேலும், சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசாக விளங்கும் திமுகவின் திட்டங்களும், செயல்பாடுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுக் கருவிகள் எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.