மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தனது கருத்தை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மகராஷ்ட்ராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஸ்டாலின் முகநூல் பதிவு அந்த பதிவில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன தினமான இன்று, சட்ட நெறிமுறைகளில் தளராத நம்பிக்கை கொண்டோர் எதிர்பார்த்த வண்ணம், சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும், கட்சி அரசியல் லாப நோக்கத்துடன், விபரீத விளையாட்டு நடத்தும் மத்தியில் உள்ள பாஜக அரசு இனயாவது திருந்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்..
இதையும ் படிங்க:
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு: தப்பிக்குமா ஃபட்னாவிஸ் அரசு?