இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ”தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை அதிமுக ஆட்சியாளர்கள் தங்களின் சுயலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக, தமிழ்நாடு முழுவதும் தாராளமாக விற்பனை செய்ய அனுமதித்ததை அம்பலப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் குட்கா பொட்டலங்களை எடுத்துக்காட்டிய திமுக உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு, உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்து, நீதியை நிலைநாட்டிய நிலையில், இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றத்தின் 2ஆவது சூடு...! - மு.க. ஸ்டாலின் - ஸ்டாலின்
சென்னை: குட்கா ஊழல் தொடர்பான விசாரணை வேகமாக நடைபெற்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அநீதியை தழுவிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, நீதிமன்றம் இரண்டாவது முறையாகவும் சூடு போட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை இப்போதும் பெருமளவில் நடைபெற்றுவருவதை டைம்ஸ் ஆஃப் இந்தியா அண்மையில் விரிவாக வெளியிட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று, பொதுநலனைக் காப்பாற்றும் வகையில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!" என்றார்.
இதையும் படிங்க: குட்கா விவகாரம் - உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை