திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை தப்பவிடாமல் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
பொள்ளாச்சி விவகாரத்தில் என் மீதும் புகார்: மு.க.ஸ்டாலின் - பொள்ளாச்சி விவகாரம்
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் என் மருமகன் மீது மட்டும் வழக்கு தொடரவில்லை தன் மீதும் புகார் அளித்திருக்கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
mk
இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியே குற்றவாளிகளுக்கு துணை நிற்பதால் அது தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை திசை திருப்பவே தன் மருமகன் சபரீசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை தூண்டி விடுகிறேன் என தன் மீதும் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். நீதிமன்றத்தை நாங்கள் நாட இருக்கிறோம்” என்றார்.
Last Updated : Mar 15, 2019, 3:13 PM IST